தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கிரிக்கெட் வாழ்க்கையில் நீடிப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியை பொருத்தவரையில், அனுபவம் வாய்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் டேல் ஸ்டெயின்.
தற்போது கார்கிஸோ ரபாடா மற்றும் லுங்கி என்கிடி ஆகியோர் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும், ஸ்டெயினின் அனுபவம் அணிக்கு முக்கியமாகும்.
எனினும் தொடர்ந்து வரும் உபாதைகள் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறி வருகின்றார்.
இப்போது டேல் ஸ்டையினுக்கு 34 வயதாகும் நிலையில், அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வியெழுந்துள்ளது. இந்நிலையில் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து டேல் ஸ்டெயின் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில்,
“நான் இன்னும் அதிகமாக கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். 38 வயது வரையில் விளையாடுவதற்கு முயற்சிக்கிறேன். அதாவது நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு விளையாட வேண்டும். 38 வயது வரையில் கவுண்டி அல்லது ஏனைய தொடர்களில் விளையாட முடியும். ஆனால் நாட்டுக்காக எவ்வளவு காலம் விளையாட முடியும் எனக்கு தெரியவில்லை.
நான் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. தற்போது தென்னாபிரிக்க அணியின் பயிற்றுவிப்பாளர் ஒடிஸ் கிப்சனுடன் கலந்துரையாடி வருகின்றேன். 2019ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் விளையாட முடியும் என நினைக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!!!
- 11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
Dale Steyn quashes retirement plans news Tamil, Dale Steyn quashes retirement plans news Tamil, Dale Steyn quashes retirement plans news Tamil