(Andhra style chicken curry)
கோழிக்கறியில், நாட்டுக்கோழிக்கறி தான் நல்லது என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி, ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் அதிக சுவையுடன் இருக்கும். அதிலும் நாட்டுக்கோழியை ஆந்திரா ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால், ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். ஆந்திரா ஸ்டைலில் உள்ள ஒரு வித்தியாசம் என்றால், மசாலா பொருட்களை சேர்க்கும் விதம் தான். இப்போது நாம் ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி – 1 கிலோ
வெங்காயம் – 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 2 (நறுக்கியது)
தயிர் -2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3-4 (நறுக்கியது)
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 3 பல்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது),
தண்ணீர் – 1 கப்
செய்முறை:
முதலில் மல்லி, சீரகம், தேங்காய், பூண்டு ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்து, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கன் துண்டுகளை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து, தக்காளி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், கரம் மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, மசாலா சிக்கனில் படுமாறு நன்கு பிரட்டி, தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, மூடி வைக்க வேண்டும்.
tags;-Andhra style chicken curry
<<TAMIL NEWS GROUP SITES>>