“காலா” பார்த்து கடுப்பான ரஞ்சன்: இனி ரஞ்சித் படத்தில் ரஜினி நடிக்க கூடாதாம்..!

0
968
ranjan ramanayake talking rajini new movie kaala

(ranjan ramanayake talking rajini new movie kaala)
சமீபத்தில் வெளிவந்த பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ”காலா” திரைப்படம் வெளியானது. ரஜினியின் அரசியல் பிரவேசத்துடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்மறையான கருத்துக்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் இலங்கையின் முன்னணி திரைப்பட நடிகரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க இத்திரைப்படத்தை பார்த்த பின் சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவுசெய்துள்ளார். அவரது இந்த கருத்தானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குறிப்பாக ”காலா“ திரைப்படமானது தனக்கு பாரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இந்த படத்தை விட “கபாலி” திரைப்படமானது எவ்வளவோ மேலானது. ரஜினி அவர்களே நீங்கள் ஆசியாவின் சூப்பர் ஸ்டார் ஆவீர்கள், எனவே தயவு செய்து நல்ல கதைகளை தேர்ந்தெடுங்கள். உங்களது தீவிர ரசிகனாக இந்த கருத்தை தங்களிடம் முன்வைக்கின்றேன். அத்தோடு தனுஷ்,ஐஸ்வர்யா மற்றும் லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில் இனி பா. ரஞ்சித் அவர்களுடன் ரஜினிகாந்தை நடிக்க வைக்க வேண்டாம். ஒரு சூப்பர் ஸ்டாருக்கான கதையை எப்படி அமைக்கவேண்டும் என்று அவருக்கு புரியவில்லை. இது சாதாரண படமல்ல, இந்திய சூப்பர் ஸ்டாரின் படமாகும் எனவே எந்திரன் 2.0 படத்தை நான் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று உருக்கமாக தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார்.

Video Source: Facebook

ranjan ramanayake talking rajini new movie kaala
Tamilnews.com