தந்தைக்கு கோடரியால் மண்டையில் போட்ட மகள்..!!!

0
1295
Trincomalee's father daughter Kodari skull

 

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் மகளின் கோடரி வெட்டுக்கு இலக்காகி தந்தை பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இன்று (10 ) ஞாயிற்றுக்கிழமை மகாதிவுல்வெவா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (Trincomalee’s father daughter Kodari skull)

இவ்வாறு கோடரி இலக்கானவர் அதே இடத்தைச் சேர்ந்த அபூசாலி தாஜிதான் (62 வயது )எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது கோடரியால் வெட்டிய மகளின் மகன் சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை பார்க்கச் செல்லுமாறும் கூறியவேளை தன்னை கோடரியால் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான தந்தை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தந்தையை கோடரியால் வெட்டிய 26 வயதுடைய மகள் தன்னை தாக்கியதாக கூறி மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு அவரும் மகாதிவுலவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- Trincomalee’s father daughter Kodari skull
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites