சல்மான்கானை கொலை செய்ய திட்டமிட்டேன் – தாதா சம்பத் பரபரப்பு தகவல்

0
554
tamilnews thug sampath nehra planning kill salman khan

(tamilnews thug sampath nehra planning kill salman khan)

பொலிவுட் நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக பிரபல தாதா சம்பத் நெக்ரா (பாதாள உலக தலைவர்) பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

இந்தி நடிகர் சல்மான்கான். ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை மான்களை வேட்டையாடிய குற்றத்துக்கு அவருக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மான் வேட்டையாடியது குறித்து பிஷ்னாய் என்னும் இன மக்கள் புகார் அளித்தனர்.

அந்த இனத்தை சேர்ந்தவர்கள் நடிகர் சல்மான்கான் தங்களுக்கு விரோதி என்று தெரிவித்து வந்தனர்.

அந்த இனத்தை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னாய் கடந்த ஜனவரி மாதம் சல்மான்கானை கொல்வோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்தநிலையில் சல்மான் கானை கொலை செய்ய சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

சல்மான்கானை கொல்ல திட்டமிட்டதாக பிரபல சம்பத் நெக்ரா கைது செய்யப்பட்டான்.

அரியானா சிறப்பு படை பொலிசார் அவனை கைது செய்தனர். லாரன்ஸ் பிஷ்னாயிடம் பணிபுரிந்த சம்பத் நெக்ரா துப்பாக்கியால் குறி பார்த்து சுடுவதில் திறமையானவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியானா மாநில அரசியல் தலைவர் ஒருவரை கொல்ல முயன்றதாகவும், ஒரு தொழில் அதிபரை கடத்தி ரூ. 3 கோடி பணம் பறித்ததாகவும் லாரன்ஸ் பிஷ்னாய் ஆட்கள் மீது வழக்கு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி சம்பத் நெக்ராவை ஐதராபாத்தில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.

பிடிபட்ட சம்பத் நெக்ரா நடிகர் சல்மான்கானை கொல்ல திட்டமிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

இது தொடர்பாக அரியானா சிறப்பு படை பொலிசார் கூறிய போது,

அரிய வகை மான் ஒன்றை வேட்டையாடிய வழக்கு தொடர்பாக சல்மான்கானை கொல்ல போவதாக லாரன்ஸ் பிஷ்னாய் மிரட்டல் விடுத்து இருந்தான்.

இதற்காக அவனது கூட்டத்தை சேர்ந்த தாதா சம்பத் நெக்ரா கடந்த ஜனவரி மாதம் சல்மான் கான் வீட்டை ரசிகர் என்ற போர்வையில் சென்று வேவு பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தை முடித்து விட்டு இந்தியாவை விட்டு வெளியேறவும் முடிவு செய்து இருந்தான்.

தப்பிக்க அங்கே சரியான வழி இல்லாததால் கொலை திட்டத்தை நிறைவேற்ற வில்லை.

சம்பத் நெக்ரா எங்களிடம் அளித்த வாக்கு மூலத்தில் இதை தெரிவித்து உள்ளான் என பொலிசார் தெரிவித்தனர்.

சல்மான்கானை கொல்ல திட்டமிடப்பட்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(tamilnews thug sampath nehra planning kill salman khan)

<MOST RELATED CINEMA NEWS>>

நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

தீபிகா படுகோனின் புதிய அவதாரம் : உற்சாக வரவேற்பளிக்கும் ரசிகர்கள்..!

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Kaala Movie Review Tamil Cinema