இன்றைய ராசி பலன் 10-06-2018

0
697
Today Horoscope 10-06-2018

மேஷ ராசி நேயர்களே !
அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மந்தநிலையைச் சந்திப்பீர்கள். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்களுக்கு செலவில் சிக்கனம் தேவை. தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

ரிஷப ராசி நேயர்களே !
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மிதுனம் ராசி நேயர்களே !
மறைமுக எதிரியை இனம் கண்டு விலகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். உடல்நிலை திருப்தியளிக்கும்.

கடக ராசி நேயர்களே !
முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்பநலனுக்காகப் பாடுபடுவர். உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

சிம்ம ராசி நேயர்களே !
மனதில் நேர்மை எண்ணம் மேலோங்கும். தொடங்கும் பணி தடையின்றி நிறைவேறும். தொழில் வியாபாரம் வியப்பூட்டும் வகையில் வளர்ச்சி பெறும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி ராசி நேயர்களே !
குடும்ப விஷயத்தை பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வளர்ச்சி பெற விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையால் திண்டாடுவர். கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

துலாம் ராசி நேயர்களே !
மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெண்கள் பணம், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கும் வகையில் தாராள பணவரவு உண்டு. காணாமல் தேடிய பொருள் கை வந்து சேரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

தனுசு ராசி நேயர்களே !
வாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும். சமூக விஷயத்தில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

மகர ராசி நேயர்களே !
சிலரது பேச்சால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் பிள்ளைகளின் வழியில் செலவு செய்வர். அரசியல்வாதிகள் இதமான அணுகுமுறை பின்பற்றவும்.

கும்பம் ராசி நேயர்களே !
பொறுப்பை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவது நல்லது. பணவரவு சீராக கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.

மீனம் ராசி நேயர்களே !
எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். பணியாளர்கள் விரும்பிய சலுகை கிடைக்கப் பெறுவர். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். அரசு வகையில் நன்மை கிடைக்கும்.

மேலும் பல சோதிட தகவல்கள்