கலவரத்தின் போது முகநூல் முடக்கத்தின் காரணம் இதோ…!!

0
1210
Facebook company involved violent Sinhala language work

(Facebook company involved violent Sinhala language work)

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மதக்கலவரத்துக்கு பிறகு இலங்கையில் செயற்பட்டு வரும் முகநூல் நிறுவனம் சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் சேர்த்து வருகிறது.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் பௌத்தர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையியே ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாடு முழுதும் 10 நாள்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

மேலும், வன்முறை ஏற்படவும் அது மேலும் பரவவும் முகநூலில் பதிவிடப்பட்ட எரிச்சலூட்டும் வார்த்தைகள் முக்கிய காரணமாக அமைந்தன.

மேலும், சிங்கள மொழியில் சமூக விரோதிகள் பதிவிட்ட விரும்பத்தகாத மற்றும் எரிசலூட்டும் சிங்கள மொழி வார்த்தைகளை அடையாளம் கண்டு நீக்கவில்லை என ஒரு வார காலத்திற்கு முகநூலை முடக்க அந்நாட்டு தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டது.

வன்முறையில் இருந்து இலங்கை சுமூக நிலைக்கு திரும்பிய பின்னர் முகநூல் நிறுவனம் நடந்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது.

இந்த நிலையில், இது போன்ற நிலை வருங்காலத்தில் மேலும் ஏற்படாமல் தடுக்க அந்நாட்டில் இயங்கி வரும் முகநூல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிங்கள மொழி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சிங்கள மொழி தெரிந்தவர்களையே அதிகளவில் முகநூல் நிறுவனம் தற்போது பணியில் அமர்த்தி வருகிறது.

tags :- Facebook company involved violent Sinhala language work
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites