யாழ்ப்பாணம் – மண்டை தீவில் கடற்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. (32 year anniversary fishermen killed navy island Skull observed today)
இதன்போது குருநகர் சனசமூக நிலையம் முன் அமைந்துள்ள நினைவு தூபியில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தலில் மக்களுடன் யாழ்மாநகரசபை மேயர் மற்றும் அருட்தந்தையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படுகொலை சம்பவமானது; 1986 ஜூன் 10 ஆம் நாள் அன்று, குருநகர் துறையில் இருந்து தூயஒளி என்ற படகு மீனவர்களுடன் புறப்பட்டது. மண்டைதீவு கடலில் மீனவர்கள் 27 பேர் இறங்கினர் ஏனையோர் வலை வளைக்க ஆயத்தமாக படகில் இருந்தனர்.
இதன் போது கடற்படையினர் கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அணுகினர். மீனவர்கள் தாம் பொது மக்கள் எனத் தெரிவிக்கும் பொருட்டு தமது கைகளை உயர்த்தினர் ஆனாலும் கடற்படையினர் மீனவர்களைத் தாக்கத் தொடங்கினர். மீனவர்களின் படகுகளையும், மீன் வலைகளையும் சேதப்படுத்தினர். அங்கிருந்த அனைத்து மீனவர்களையும் கோடரி, வாள், கத்தி , பொல்லாலும் துவக்குப்பிடியாலும், வெட்டியும், கொத்தியும், அடித்தும் சித்திரவதைக்குடப்படுத்தி படுகொலை செய்தனர்.
மீனவர்களின் கண்கள் குத்தப்பட்டுக் குழிகளாயின. சிலரது வயிற்றுப் பகுதி கிழிக்கப்பட்டிருந்தது. இதில் குருநாகரைச் சேர்ந்த 30 மீனவர்களும், மண்டைதீவைச் சேர்ந்த ஒரு மீனவருமாக 31 பேரும் கொல்லப்பட்டனர்.
tags :- 32 year anniversary fishermen killed navy island Skull observed today
- வாங்கிய 30 லட்சத்தையும் மீண்டும் திருப்பி கொடுக்க தயார் – சுஜீவ நேசிங்க
- நான் அசைவ உணவை உண்ணமாட்டேன்; உங்கள் இப்தார் கஞ்சியை அருந்த முடியாது – விக்னேஸ்வரன்
- சர்வதேச போர் குற்றவியல் விசாரணைகளை உடன் ஏற்றுக் கொள்ளுங்கள் – ஐ. நா காட்டம்
- கண்டியில் விசேட அதிரடிப் படையினருக்கும் பாதாள உலக கோஷ்டிக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சமர்; இருவர் பலி
- யாழில் பரபரப்பு ; இறுதி கிரியையின் போது 2 வது முறையாகவும் உயிர் பிழைத்த சிறுமி!!
- சைட்டம் முன்னாள் நிறைவேற்று அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்
- தென்னை மர கிளையால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- வௌிநாட்டு மதுபான போத்தலில் இருந்தது பச்சை தண்ணீர்தான் – மகனை காப்பாற்றும் பாலித்த
- தயாசிரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ……..!
- இராணுவத்தினரை தண்டிக்க இடமளியேன் – குற்றங்களை ஏற்கவும் மாட்டேன்
- ட்ரம்பை சந்திக்கும் அந்த தருணத்தில் நான் கொல்லப்படலாம் – 3000 செய்தியாளர்கள் ஒரே இடத்தில்
- நோன்பு பண்டிகை தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள செய்தி