பாகிஸ்தானை அடிபணிய வைத்த இந்தியா : ஆசிய கிண்ணத்தில் அபாரம்!!!

0
556
India vs Pakistan Asia Cup 2018 news Tamil

ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

மலேசியாவில் நடைபெற்று வரும் போட்டித் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இந்த போட்டி அமைந்திருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்து, மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான நஹிடா கான் 18 ஓட்டங்கள், மத்திய வரிசை வீராங்கனை சனா மிர் 20 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள ஏனைய வீராங்கனைகள் ஒற்ற இலக்க ஓட்டத்துடன் வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை மாத்திரம் இழந்திருந்த பாகிஸ்தான் அணியால் 73 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

இந்திய அணியின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட எக்டா பிஷ்ட் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணிசார்பில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா 38 ஓட்டங்களையும், ஹம்ரீட் கஹுர் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, இந்திய அணி 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணிசார்பில் அனாம் அமின் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

<<Tamil News Group websites>>

India vs Pakistan Asia Cup 2018 news Tamil, India vs Pakistan Asia Cup 2018 news Tamil