பிரான்ஸில் Sartrouville (Yvelines) நகரில் கடந்த புதன்கிழமை (ஜூன் 6) இரவு கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலவரத்தினால் பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டுள்ளது. Yvelines Mosque closed prevent riots
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அரச அதிகாரிகள் தெரிவிக்கும் போது, அப்பகுதியானது இஸ்லாமிய மதவாத பிரச்சினைகளை எப்போதும் கொண்டுள்ள ஒரு பகுதியாகும். கடந்த புதன்கிழமை இரவு இங்கு பெரும் கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், அங்கு வந்த காவல்துறையினர் வன்முறையை அடக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலவரத்தின் போது நகராட்சிக்கு சொந்தமான பல பொருட்களை சேதமாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கட்டிடம் ஒன்றை சுற்றி வளைத்த கலவரக்காரர்கள், கற்களை கொண்டு வீசி கண்ணாடிகளை உடைத்ததாகவும், காவல்துறையினரின் வாகனங்களையும் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வன்முறையை அடக்கிய காவல்துறையினர், அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றை மூடி, சீல் வைத்துள்ளனர். கலவரத்தினை அடக்க பல இறப்பர் குண்டு துப்பாக்கிச்சூடுகளும், 43 கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!