சிட்னியின் சிறுவனொருவன் பரிதாபமாக பலி!

0
817
Sydney Boy Murder

 

சிட்னியில் இடம்பெற்ற குடும்ப வன்முறையின் போது 5 வயதுச் சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளான். Sydney Boy Murder 

சிட்னி Carlingford பகுதியிலுள்ள வீட்டில் நடைபெற்ற குடும்ப தகராறின்போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தை என கூறப்படும் 36 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை அவனது பாட்டி தடுக்க முற்பட்டபோதும் அது பலனளிக்கவில்லை எனவும் கடும் காயத்திற்குள்ளான சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

சம்பவம் நடைபெற்றபோது சிறுவனின் தாயார் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குடும்ப வன்முறைக்கு உள்ளாகுபவர்கள் 1800 737 732 என்ற இலக்கத்தினூடாக உதவி பெறலாம்.