இந்திய வீரர்கள் எட்டாத மைல் கல்லை தொட்டார் மிதாலி ராஜ்!!!

0
592
Mithali Raj T20 Record news Tamil

இந்திய மகளிர் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனையாகவும், அணித்தலைவியாகவும் செயற்பட்டு வரும மிதாலி ராஜ், சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் இந்தியராக பெருமையை பெற்றுள்ளார்.

சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 2000 என்ற மைல் கல்லை டோனி, கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய முன்னணி வீரர்கள் கூட இதுவரையில் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

74 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ், 38.01 என்ற சராசரியில் 14 அரைச்சதங்கள் அடங்கலாக 2015 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதேவேளை இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி 2000 ஓட்டங்களை எட்டுவதற்கு 17 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது. விராட் கோஹ்லி 58 போட்டிகளில் விளையாடி 1983 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்தப்படியாக தற்போது விளையாடி வரும் ரோஹித் சர்மா 1852 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 1499 ஓட்டங்களையும் டோனி 1444 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

Mithali Raj T20 Record news Tamil, Mithali Raj T20 Record news Tamil, Mithali Raj T20 Record news Tamil