குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…?

0
796
Kula Deivam Worship Today Horoscope

ஒரு குடும்பத்துக்கு குலதெய்வம் ஒன்று இருக்கும். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே.(Kula Deivam Worship Today Horoscope )

நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்கலாம்.

குடும்பத்தில் எந்த சுப நிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் விரதமிருந்து உடனே குலதெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குலதெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

குடும்பத்தில் குடும்பப் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து குலதெய்வம் பற்றித் தெரிந்துகொண்டு பரிகாரம் செய்து வழிபடலாம். குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து, வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் நிம்மதியாக வாழ்வார்கள்.

News source :tamil.webdunia.com

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Kula Deivam Worship Today Horoscope