நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

0
557
Imman Devi Sri Prasad debut Tamil cinema,Imman Devi Sri Prasad debut Tamil,Imman Devi Sri Prasad debut,Imman Devi Sri Prasad,Imman Devi Sri

பிரபல இசையமைப்பாளர்களான டி.இமான் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இருவரும் நடிகர்களாக அறிமுகமாக இருக்கிறார்களாம்.(Imman Devi Sri Prasad debut Tamil cinema)

டி.இமான் சமீபத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். குண்டாக இருந்ததில் இருந்து நடிப்பதற்கான உடல்வாகுக்கு தன்னை கொண்டு வந்தார். அப்போதே நடிக்க வருவதற்கா..? என்று கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், இயக்குனர் எழில் படத்தில் அவர் நடிகராக அறிமுகமாக இருப்பதாக செய்தி வருகிறது. இயக்குனர் எழில் இப்போது விஷ்ணு விஷாலை வைத்து ”ஜகஜால கில்லாடி” என்னும் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து இயக்கும் படத்தில் இமானை நடிக்க வைக்கலாம்.

இமான் போலவே தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிகராக களம் இறங்கவிருக்கிறார்.

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் போது.. :-

“நிறைய இயக்குநர்கள் கதை சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. தமிழ்லகூட நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால் சரியான சந்தர்ப்பமும் அமைய மாட்டேங்குது. ’ரங்கஸ்தலம்’ படத்துல நான்தான் ஹீரோவா நடிக்கணும்னு சுகுமார் சார் ஆசைப்பட்டார்.

அந்த சமயத்துல துரதிர்ஷ்டவசமா என் அப்பா தவறிட்டார். அதனால் அதுல நடிக்க முடியாமல் போயிடுச்சு. நடிக்கணும்ங்கிற ஆசை இப்போதும் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

மேலும், தமிழ் சினிமாவில் காமெடியன்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் நாயகனாக அவதாரம் எடுக்கும் நிலையில், இவர்கள் இருவரும் நடிகர்களாக வர தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

காலா : திரை விமர்சனம்..!

எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..!

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..!

Tags :-Imman Devi Sri Prasad debut Tamil cinema

Our Other Sites News :-

பெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா?