களிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்

0
750
french open unstoppable Rafael nadal news Tamil

பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஸ்பெயினின் முதற்தர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் போரடி தகுதிபெற்றுள்ளார்.

ரபேல் நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில், ஆர்ஜன்டீனாவின் டியாகோ சுவெட்ஷ்மேனை எதிர்கொண்டு விளையாடினார்.

இந்த போட்டியில் நடாலுக்கு கடுமையான போட்டிக்கொடுத்த டியாகோ சுவெட்ஷ்மேன், போரடி தோல்வியடைந்தார்.

போட்டியின் ஆரம்ப செட்டை 6-4 என கைப்பற்றி டியாகோ சுவெட்ஷ்மேன் சிறப்பான ஆரம்பத்தை பெற்றார். எனினும் அடுத்த மூன்று செட்களிலும் தனது போர்மிற்கு திரும்பிய நடால் அதிரடியாக ஆடி, 3-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றிய நடால், அடுத்த இரண்டு செட்களையும் 6-2 மற்றும் 6-2 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.

நடால் அரையிறுதியில் ஆர்ஜன்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் பொட்ரோவை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>

french open unstoppable Rafael nadal news Tamil, french open unstoppable Rafael nadal news Tamil, french open unstoppable Rafael nadal news Tamil