வடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்!

0
932

போர் முடிவடைந்த பின்னும் தமிழ் மக்களை விட்டு ஒழியாத பீடைகளாக தொடர்ந்தும் எமது மக்களின் காணிகளை அபகரித்து கொண்டு இலங்கை இராணுவம் நீண்ட காலமாக தமிழர் தாயக பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. CV Vigneswaran Participated Sri Lanka Army Tree Planting Event

வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தின் அளவை குறைத்து எமது மக்களின் நிலப்பரப்புகளை அவர்களிடம் இருந்து மீட்டெடுக்க எமது மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இராணுவ பிரசன்னத்தின் தீமைகளை அறிந்து கொண்டவர்களாக எமது நிலப்பரப்புகளில் சிங்கள இராணுவம் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும் பின்னணியில் முளை விட கூடிய சிங்கள குடியேற்றங்களை மனதில் கொண்டவர்களாக எமது மக்கள் அவர்களை வெளியேற்றும் முயற்சிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ள வேளையில் , இது தொடர்பில் முழுமையும் அறிந்த எமது அரசியல் தரப்புகள் அவர்களுடன் கை கோர்த்து கொண்டு செய்யும் கூத்துகள் மிகவும் வெறுப்பை தருபவை.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரநடுகை திட்டத்தில் முற்றிலும் இராணுவம் பயன்படுத்தப்பட்ட நிலையில் யாழ் மாநகர சபையும் , வடக்கு மாகாண சபையும் தமது பூரண ஆதரவை நல்கி அதில் கலந்து கொண்ட விடயம் மிகவும் கேவலமானது.

சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தொடர்ச்சியாக இராணுவத்தை தமிழ் பிரதேசங்களில் நிலைத்து வைக்க பல காரணங்கள் உருவாக்கப்படுகின்றன.

அவற்றின் படிகளாகவே இராணுவத்தை சிவில் சமுகத்தில் கலக்க செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மை காலமாக இராணுவம் பல சிவில் சமுக செயற்ப்பாடுகளில் ஈடுபட்டு வருவதை கண்கூடாக காண முடிகின்றது. இவையெல்லாம் எமது சமுகத்தின் முன்னேற்றம் கருதி என யாரும் நினைத்தால் நிச்சயம் சிங்கள அரசு தனது நிகழ்ச்சி திட்டத்தில் வெற்றியடைந்து விட்டது என்றே கொள்ளவேண்டும்.

சிவில் செயற்ப்பாடுகளை முன்னெடுக்க சிவில் கட்டமைப்புகள் இருக்கும் போது இராணுவ தலையீடு ஏன் என்பதை விளங்கி கொள்ளுங்கள்.

இவ்வாறான ஒரு காலகட்டத்தில் பொது மக்கள் இராணுவத்தை வெளியேற்ற போராடி வரும் நிலையில் , முதலமைச்சர் விக்கினேஸ்வரன் போன்ற உயர் நிலை அரசியல் தலைமைகள் இராணுவத்துடன் கை கோர்த்து நிற்பது உலக அரங்கில் இராணுவ பிரசன்னம் தொடர்பில் பிழையான எண்ணப்பாட்டையே தோற்றுவிக்கும்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு முதலமைச்சர் மற்றும் யாழ் மாநகரசபை முதல்வர் போன்றோர் என்ன காரணத்தை கூறினாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதில்லை.

இந்த நிகழ்வை புறக்கணித்திருப்பதன் மூலம் தமிழ் தரப்பின் மிகவும் சரியான நிலைப்பாட்டை இலங்கை அரசுக்கு எடுத்து கூறியிருக்கலாம்.

ஒருபுறம் தமிழ் மக்களின் நலனுக்காக பாடுபடுகின்றோம் என கூறிக்கொண்டே மறுபுறம் பேரினவாதிகளின் திட்டங்களுக்கு துணை போகும் அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு