பிரெஞ்சு ரயில் தொழிலாளர்கள் இன்று (ஜூன் 7) மற்றொரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். French SNCF rail strikes continue june7
பிரான்ஸ் நாடு முழுவதும் மக்ரோனின் புதிய சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, இன்றும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெறுவதனால் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும்.
இன்று பத்தில் ஏழு TGV ரயில்கள் சேவையில் ஈடுபடும். மேலும் TGV Nord இல் ஐந்து ரயில்களில் நான்கு ரயில்கள் இயக்கப்படும்.
சர்வதேச பயணங்களில், Eurostar மற்றும் Thalys ரயில்கள் வழமைபோல இயங்கும். இருப்பினும் பிரான்ஸ்-ஸ்பெயின் பாதைகளில் எந்த ரயில்களும் சேவையில் ஈடுபடாது.
இன்று Intercités ரயில்களின் சேவையிலும் இடையூறு ஏற்படும் என கூறப்படுகிறது. அதாவது, பாரிஸ்-கிரான்வில்லில் ஐந்து ரயில்களில் இரண்டு மட்டுமே புழக்கத்தில் இருக்கும். ஆனால் இரவில் எந்தவித ரயில் சேவைகளும் சேவையில் ஈடுபடாது.
இதற்கிடையில், TER பயணிகள் தங்களது பிராந்திய நிலையத்தில் TER சேவைகளை பற்றி அறிந்து கொள்ளுமாறு கேட்கப்படுகிறது.
RER A சேவைகள் வழமைபோல இயங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் RER B இல் இரண்டில் ஒரு ரயில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளொன்றில் இவ் வேலைநிறுத்தங்களால் பிரான்ஸில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான தினசரி ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- மதிப்புமிக்க நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ்!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!