பிரதமர் மோடிக்கு எதிராக சர்வதேச சதி நடக்கிறது!’ – பா.ஜ.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

0
357
2019 parliamentary election, Modi successful international conspiracy

2019 parliamentary election, Modi successful international conspiracy

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிபெறக் கூடாது என்பதற்காக சர்வதேச அளவில் சதி நடப்பதாக கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. சி.டி.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, “இந்தியா முழுவதும் கருத்து வேறுபாடுகொண்ட கட்சிகளை மோடி அலை ஒன்றுசேர்த்திருக்கிறது. பிரதமர் மோடியைக் கண்டு அஞ்சும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள், அவர் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என விரும்புகின்றன. பாகிஸ்தான் நினைப்பதையே எதிர்க்கட்சிகளும் எண்ணுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மோடி, மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, மிகப்பெரிய சதி நடக்கிறது. பிரதமர் பதவியில் மீண்டும் மோடி அமர்ந்தால், ஒரு தலைவராக அவரது வலிமை மேலும் அதிகரித்துவிடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். நாட்டை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டுவரும் பிரதமர் மோடிக்கு, வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மக்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன்.

மேலும், கர்நாடகாவில் ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணியை ஆட்சி அதிகாரத்துக்காக மாநிலக் கட்சிகள் போல காங்கிரஸ் கட்சி செயல்படுகின்றன. கர்நாடகாவில் 104 இடங்கள் கிடைத்தும், பெங்களூர், பிஜாப்பூர், பெல்லாரி, பெலகாவி மற்றும் பைடர் ஆகிய பகுதிகளில் கிடைத்த தோல்வியே, ஆட்சியமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை கிடைக்காததற்குக் காரணம் என்றும் ரவி தெரிவித்துள்ளார்.

2019 parliamentary election, Modi successful international conspiracy

More Tamil News

Tamil News Group websites :