இன்றைய ராசி பலன் 05-06-2018

0
894
Today horoscope 05-06-2018

இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 22ம் தேதி, ரம்ஜான் 20ம் தேதி,
5.6.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி காலை 6:43 வரை;
அதன்பின் சப்தமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 3:39 வரை;
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.(Today horoscope 05-06-2018 )

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
பொது : பெருமாள், பைரவர் வழிபாடு.

மேஷ ராசி நேயர்களே !
வரன்கள் வாயில்தேடிவரும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடி வந்து தருவர். ஆரோக்கியம் சீராகும். கடிதப் போக்குவரத்து கவலையைப் போக்கும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே !
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பணியாட்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். சிக்கலான சில காரியங்களைக் கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். வங்கிகளில் சேமிப்பு உயரும்.

மிதுனம் ராசி நேயர்களே !
தடைப்பட்ட தனவரவு தானாக வந்து சேரும் நாள். தித்திப்பான செய்தியொன்று தூரதேசத்திலிருந்து தொலைபேசி மூலம் வரலாம். மாலைநேரம் உங்கள் விருப்பு, வெறுப்புகளை வெளியில் சொல்வதால் சில பிரச்சினைகள் உருவாகலாம்.

கடக ராசி நேயர்களே !
மனநிறைவு கூடும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கரைந்த வங்கிச் சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.

சிம்ம ராசி நேயர்களே !
திடீர் பயணம் ஏற்படும் நாள். சிக்கனத்தைக் கையாள முயற்சிப்பீர்கள். மனக்கலக்கம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. இடமாற்றம், பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கன்னி ராசி நேயர்களே !
மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் விலகுவர். தொழில் வளாச்சிக்கு இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

துலாம் ராசி நேயர்களே !
பிற இனத்தாரால் பெருமை சேரும் நாள். சாமர்த்தியமாகப்பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும். செல்வாக்கு மேலும் உயர வழிவகுத்துக் கொள்வீர்கள். வரவு திருப்தி தரும்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாகன யோகம் உண்டு. கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும்.

தனுசு ராசி நேயர்களே !
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி உண்டாகும். அலங்காரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

மகர ராசி நேயர்களே !
செல்வ வளம் பெருகும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். செல்வாக்கு மேலோங்கும். முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். கட்டிடப் பணியை தொடரும் எண்ணம் மேலோங்கும்.

கும்பம் ராசி நேயர்களே !
சந்தித்தவர்களால் சந்தோ‌ஷம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். மாமன், மைத்துனர் வழியில் மனம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். இடம், பூமி வாங்கும் முயற்சி பலன் தரும்.

மீனம் ராசி நேயர்களே !
இஷ்ட தெய்வத்தை வழிபட்டு குதூகலம் காண வேண்டிய நாள்.முயற்சிகளில் தடைஏற்படலாம்.சகோதரர்களாலும்,நண்பர்களாலும் விரயங்கள் ஏற்படலாம்.தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today horoscope 05-06-2018