ஒன்டாரியோவின் கிழக்கில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 4 பேருக்கு தீவிர காயமேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Ontario Accident
குறித்த பஸ் சீன சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்றதொன்றென தெரிவிக்கப்படுகின்றது.
பஸ் சாரதி, சுற்றுலா வழிகாட்டி உட்பட 37 பஸ்ஸில் இருந்ததாகவும், பஸ் பாறையொன்றின் மோதியமையாலேயே விபத்து இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பில் தாம் கேள்விபட்டதாகவும், காயமடைந்த தமது நாட்டவர்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாகவும் ஒட்டாவாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.