ஐ.பி.எல். தொடரை புகழ்ந்துத் தள்ளிய ஜோஸ் பட்லர்!

0
564
Jos Buttler credits ipl helps test recall

இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் ஐ.பி.எல். தொடர் காரணமாகதான் தனக்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்கிடைத்தது என புகழ்ந்துள்ளார்.

ஜோஸ் பட்லர் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 அணிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்தாலும், டெஸ்ட் அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

2016ம் ஆண்டு முதல் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் மாத்திரம் தனது அதிரடியை வெளிக்காட்டிய ஜோஸ் பட்லருக்கு, இடைக்கிடையில் அவரது துடுப்பாட்டத்தில் ஏற்றத் தாழ்வுகள் வந்து போனது.

எனினும் இம்முறை ஐ.பி.எல். தொடரில் பட்லர் தொடர்ச்சியாக 5 அரைச்சதங்கள் அடித்து 548 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திய ஜோஸ் பட்லர் பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 67 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களை பெற்று அணியின் தொடர் தோல்வியை தவிர்த்தார்.

இந்நிலையில் தனது டெஸ்ட் துடுப்பாட்டம் மற்றும் டெஸ்ட் வாய்ப்புக்கு ஒட்டுமொத்த காரணம், ஐ.பி.எல். தொடரில் கிடைத்த சுதந்திரம் தான் என பட்லர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஐ.பி.எல். தொடரில் விளையாடிய இரண்டு வாரங்கள் எனது மன தைரியத்தை அதிகரித்து, நம்பிக்கை கொடுத்தது. போட்டியின் இக்கட்டான தருணங்கள், இந்திய ரசிகர்கள் மற்றும் சர்வதேச வீரர்களை எதிர்கொள்ளும் போது, நான் இப்போது எங்கு இருக்கிறேன்? என்ன செய்ய வேண்டும்? என்பதை உணர்த்தியது.

நாம் எந்த நிறப்பந்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. நாம மைதானத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோமா? என்பதுதான் முக்கியம். அழுத்தத்திலிருந்து விடுபட்டு எனது ஆட்டத்தின் மீது மாத்திரம் கவனம் செலுத்தியதன் மூலமே சிறப்பான செயற்பட முடிந்தது” என தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>

Jos Buttler credits ipl helps test recall, Jos Buttler credits ipl helps test recall