(tamilnews srilankan high justice safe gottabaya rajapaksha)
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தன்னை நிதிமோசடி குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்வதில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு தொடர்பாக நீதித்துறையின் உயர்மட்டம் அவரை காப்பாற்றுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
யுத்த காலத்தில் மிக் போர் விமான கொள்வனவு மோசடி போன்ற பல்வேறு வழக்குகளில் தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் அவர் குறித்த மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு 2015 ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கோத்தாபய ராஜபக்சவை வழக்கு முடியும் வரை கைது செய்வதற்கு, நீதியரசர் ஈவா வனசுந்தர, சிசிர ஆப்ரு ஆகியோரைக் கொண்ட நீதியரசர் குழாம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், நீதியரசர் ஈவா வனசுந்தர, வழக்கு தொடர்பான விசாரணையில் இருந்து விலகிக் கொண்டார்.
அதையடுத்து, ஒவ்வொரு தவணையிலும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் போது, நீதியரசர்களான, புவனேக அலுவிகார, பிரசன்ன ஜெயவர்த்தன ஆகியோர் விலகினர்.
கடைசியாக கடந்தவாரம், நீதியரசர் முர்து பெர்னான்டோ இந்த வழக்கில் இருந்து விலகிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, கோட்டாபய ராஜபக்சவின் மனு மீதான விசாரணை நவம்பர் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதியரசர்கள் அடுத்தடுத்து விலகுவதும், வழக்கு விசாரணை நீண்ட காலத்துக்கு பிற்போடப்படுவதும், அவரை கைது செய்வதில் இருந்து காப்பாற்ற உயர்மட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
(tamilnews srilankan high justice safe gottabaya rajapaksha)
More Tamil News
- கொலை செய்யப்பட்டாரா – தற்கொலை செய்து கொண்டாரா…..? பல கோணங்களில் பொலிசார் விசாரணை
- நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – ஜெயச்சந்திரன்
- அமெரிக்காவின் பொருளாதாரத் தடை வந்தால் வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது – சீனா
- ‘அக்னி 5’ ஏவுகணை சோதனை வெற்றி
- சுயலாபத்திற்காகவும், தலைமையை தக்கவைக்கவும் மலையக கட்சிகள் முயற்சிக்கின்றன – எஸ்.சதாசிவம்
- தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி