பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ”மெர்சல்” திரைப்படத்துக்கு விஜய் அவார்ட்ஸில் மூன்று விருதுகள் கிடைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.(Mersal Movie get three Vijay Awards)
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-
கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “மெர்சல்” திரைப்படம் விஜய் அவார்ட்ஸ்-ல் 3 விருதுகளை தட்டி சென்றதாக தகவல் கசிந்துள்ளது.
அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி, விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கி திரைப்பட கலைஞர்களை கௌரவித்து வருகிறது. இந்த விருதானது சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகர், நடிகை உள்ளிட்ட பல விருதுகள் அந்த ஆண்டு வெளியான திரைப்படத்தின் கணக்கெடுப்பின்படி வழங்கப்படும்.
கடந்த சில தினங்களுக்கு நடக்க வேண்டிய விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் நிகழ்ச்சியை ஒத்தி வைத்து, அதற்கு அந்த தொலைக்காட்சி வருத்தமும் தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று (ஜூன் -3) ஆம் திகதி இந்த நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்துள்ளது. இதில் நடிகர் விஜய்சேதுபதி விக்ரம் வேதா படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார் எனவும், நடிகை நயன்தாரா சிறந்த நடிகை மற்றும் பிடித்தமான நடிகை ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறார் என தகவல் கசிந்துள்ளது.
அதேபோல் கடந்த ஆண்டு வெளியான ”மெர்சல்” திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
மேலும், இப் படத்திற்கு விருதுகளும், புகழும் குவிந்து வரும் நிலையில், தற்போது விஜய் அவார்ட்ஸ்-லும் மெர்சல் திரைப்படத்துக்கு, சிறந்த திரைப்படத்துக்கான விருதும், மெர்சல் திரைப்படத்தின் இயக்குநர் அட்லிக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும், மற்றும் மெர்சல் திரைப்படத்தின் இடம்பெற்ற ”ஆளப்போறான் தமிழன்..” என்ற பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருதும் வழங்கப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.
<MOST RELATED CINEMA NEWS>>
* வாணி ராணி நடிகை விபச்சார வழக்கில் கைது : அதிர்ச்சியில் சின்னத்திரை திரையுலகம்..!
* விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம் : ஹீரோ ஆகிட்டாலே மவுசு தான் போல..!
* ஐபிஎல் சூதாட்டம் : நடிகர் சல்மான் கானின் சகோதரருக்கு போலீசார் சம்மன்..!
* அம்மன் தாயி ஆக இரட்டை வேடத்தில் கலக்கும் பிக் பாஸ் ஜூலி..!
* போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
* மீண்டும் சினிமாவில் களமிறங்க தயாராகும் பாலியல் சர்ச்சை நடிகை..!
* நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!
* இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!
Tags :-Mersal Movie get three Vijay Awards
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-