ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை அளிக்க அரியானா அரசு முடிவு

0
577
Haryana Government decided provide vacation men care wife child durin

Haryana Government decided provide vacation men care wife child durin

பேறுகாலத்தில் மனைவியையும் குழந்தையையும் கவனித்து கொள்ள ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை அளிப்பதற்கு அரியானா அரசு முடிவு செய்துள்ளது.

அரியானா மாநில முதல்வர் மனோகர் லால், காவல் மற்றும் கல்வி துறையில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பெண் காவலர்களின் எண்ணிக்கை மற்றும் ஆரம்ப பள்ளிகளின் எண்ணிக்கைகளை உயர்த்துவது உள்ளிட்டவை குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. மிக முக்கிய முடிவாக ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை அளிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

பெண்களின் பேறுகால விடுமுறையை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக மாற்றி சமீபத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உத்தரவிட்டன.

இந்நிலையில் மனைவி, புதிதாக பிறந்த குழந்தையை பராமரிக்கும் பொருட்டு ஆண்களுக்கு ஒரு சில நாட்கள் விடுமுறை அளிக்க அரியானா அரசு திட்டமிட்டிருந்ததாக முன்னதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து துறையில் உள்ள ஆண் ஊழியர்களுக்கும் 15 நாள் மகப்பேறு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை முதலமைச்சர் மனோகர் லால் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். அரியானாவை பின்பற்றி மற்ற மாநிலங்களிலும் ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற பலத்த கோரிக்கை எழுந்துள்ளது.

Haryana Government decided provide vacation men care wife child durin

More Tamil News

Tamil News Group websites :