நேற்று(ஜூன் 3) கன மழை தொடர்ந்ததனால் 48 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் Brittany முற்று முழுதாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. France affected flood- orange warning 48 district
இன்று (ஜூன் 4) காலை 6 மணிவரை இந்த செம்மஞ்சள் எச்சரிக்கையானது அறிவிக்கப்பட்டிருந்தாலும், கன மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று, மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. Morlaix நகரம் முற்று முழுதாக மழை வெள்ளத்தால் மூழ்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
கடைகள், வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதுதவிர வீதிகளில் தேங்கி நின்ற தண்ணீரால் வாகனங்களும் மேற்கொண்டு பயணிக்க முடியாமல் முடங்கி நின்றன. இந்நிலையில், இந்த வாரம் முழுவதும் குறித்த பிராந்தியங்களில் மழை பொழிவு இடம்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
**Most Related Tamil News**
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!