“எனது காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன்” காதல் பற்றி மனம் திறந்த KL ராகுல்

0
897
KL Rahul Explain Nidhhi Agerwal Love Latest Gossip
Photo source by :Google

(KL Rahul Explain Nidhhi Agerwal Love Latest Gossip )

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் இந்தி நடிகையை காதலிப்பதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் கேஎல் ராகுல். பெங்களூரைச் சேர்ந்த இவர், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதிரடியாக விளையாடி அனைவருடைய கவனைத்தையும் ஈர்த்தார்.

KL Rahul Explain Nidhhi Agerwal Love Latest Gossip

தற்போது இவர் இந்தி நடிகை நிதி அகர்வாலை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஐதராபாத்தில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்த நிதி அகர்வாலும் கேஎல் ராகுலும் நட்பாகப் பழகி வந்தனர் என்றும் பிறகு காதலில் விழுந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் அவர்கள் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக சுற்றியபோது மீடியா கண்ணில் பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் ராகுல் ரசிகர்கள் பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.

KL Rahul Explain Nidhhi Agerwal Love Latest Gossip

நிதி அகர்வால் முன்னா மைக்கேல், டாய்லெட் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். சவ்யா சாட்சி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இருவரும் காதலிப்பதாக வெளியான தகவல்களுக்கு கேஎல் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர், “ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா?. அது என்ன அவ்வளவு கஷ்டமா? என கேட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் இருவரும் நண்பர்கள், இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். எங்கள் நட்பு நான் கிரிக்கெட்டிற்கும், அவர் நடிப்பிற்கும் வரும் முன்பிருந்தே தொடர்கிறது. எனக்கு நண்பர்களுடன் செல்வது பிடிக்கும். அதுவும் நாங்கள் தனியாக செல்லவில்லை.

KL Rahul Explain Nidhhi Agerwal Love Latest Gossip

எங்கு சென்றாலும் நண்பர்கள் 3-4 பேர் சேர்ந்து தான் செல்வோம். அப்படியே நான் காதலிப்பதாக இருந்தாலும் உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளிப்படையாக தான் காதலிப்பேன். நான் எனது காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன், எதையும் மறைக்கமாட்டேன்” என கூறினார்.

ராகுலின் இந்த விளக்கத்தினால் அவரது காதல் குறித்து வெளியான வதந்திகளுக்கு ஒரு திர்வு கிடைத்துள்ளது. இந்த வதந்திக்கு நடிகை நிதி அகர்வாலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Photos source By :Instagram

News Source By :maalaimalar.com

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:KL Rahul Explain Nidhhi Agerwal Love Latest Gossip