இலங்கையிலிருந்து பிரான்ஸிற்கு சுற்றுலா செல்ல விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 3 நாட்களில் விசாவினை பெற்று கொள்ள நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் தெரிவித்தார். Get tourist France visa 3 days
எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை, பிரான்ஸ் நாட்டின் கலாசாரம் மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரெஞ் வசந்த காலத்தின் 7 ஆவது ஆண்டு நிகழ்வு கொழும்பு மற்றும் கண்டியில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பு Hilton ஹோட்டலில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் ‘பிரான்ஸிற்கான சுற்றுலா விசாவினை 3 நாட்களில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்தார். அத்துடன், பிரெஞ் வசந்தகாலத்தின் 7 ஆவது நிகழ்வில் இளைஞர்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்தவருடத்தில் மாத்திரம் 10,000 இலங்கை சுற்றுலாப்பயணிகள் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
**Most Related Tamil News**
- பிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!