பிரான்ஸை கண்டித்த துருக்கி!

0
759
Turkey warned president macron

பிரான்ஸ் சஞ்சிகையொன்றுக்கு, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வழங்கிய ஆதரவைத் தொடர்ந்து, அவர் மீதான கடுமையான விமர்சனங்களை, துருக்கி முன்வைத்துள்ளது. Turkey warned president macron

துருக்கி ஜனாதிபதி தய்யீப் ஏர்டோவானை, “சர்வாதிகாரி” என பிரான்ஸின் பிரபலமான சஞ்சிகைகளுள் ஒன்றான “லே பொய்ன்ட்”, அண்மையில் வர்ணித்திருந்தது. இதைத் தொடர்ந்து, பிரான்ஸின் அவிக்னொன் நகரத்துக்குச் சென்ற துருக்கி ஜனாதிபதி ஏர்டோவானின் ஆதரவாளர்கள், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அச்சஞ்சிகையின் பிரதிகளை அகற்ற முற்பட்டதுடன், அச்சஞ்சிகைக்கான விளம்பரங்களையும் நிறுத்த முயற்சித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, துருக்கி ஜனாதிபதி ஏர்டோவானின் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டித்ததோடு, கருத்துச் சுதந்திரத்தையும் நியாயப்படுத்தியிருந்தார்.

இதனால், ஜனாதிபதி மக்ரோனுக்கு, துருக்கி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மெவ்லுட் கவுசொக்லு, தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**