யாழ். ஒல்லாந்த கோட்டையை பாதுகாக்க நெதர்லாந்து நிதியுதவி

0
619
tamilnews Netherlands Government protect Jaffna golden Line

(tamilnews Netherlands Government protect Jaffna golden Line)

யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை பாதுகாப்பதற்கும், வடமாகாண அபிவிருத்திக்கும் நெதர்லாந்து நாட்டு அரசாங்கம் உதவி செய்யுமென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் எச்.இ.டோர்னிவார்ட் உறுதியளித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்வார்ட் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (31) சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் 01 மணித்தியாலத்துக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் நெதர்லாந்து தூதுவர் ஆராய்ந்துள்ளார்.

சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினைகள் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினோம்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு இரணைமடுவில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டுமென்று தெரிவித்தற்கு, அவ்வாறு தண்ணீரை இங்கு கொண்டு வருவதற்கும், எவ்வளவு காலம், எவ்வளவு நிதி தேவை என்பது தொடர்பிலும் ஆராய்ந்ததுடன், வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்த நெதர்லாந்து அரசாங்கம் உதவி செய்யுமென உறுதியளித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

நெதர்லாந்து அரசாங்கம் எமது நாட்டின் அபிவிருத்திக்கும், கோட்டையின் பாதுகாப்பிற்கும் உதவி செய்வதாக தூதுவர் உறுதியளித்துள்ளதுடன், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் மற்றும் கல்வியில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

(tamilnews Netherlands Government protect Jaffna golden Line)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :