தொலை­பே­சி வைத்­தி­ருந்த பெண் மின்னல் தாக்­கி மரணம்

0
162
lightning strikes death woman holding phone chest area

lightning strikes death woman holding phone chest area

தொலை­பே­சியை மார்பு பகு­தியில் வைத்­தி­ருந்த பெண்­ணொ­ருவர் மீது மின்னல் தாக்­கி­யதில் அவர் உடல் கருகி உயி­ரி­ழந்த சம்­பவம் ஒன்று தமி­ழ­கத்தின்  வேலூர் மாவட்­டத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

அது குறித்­து மாவட்­ட பொலிஸ் தரப்பில் தெரி­வித்­துள்­ள­தா­வது,

வேலூர் மாவட்டம் திரு­வலம் பகு­தியைச் சேர்ந்த முனி­ரத்­தினம் என்­ப­வ­ரது 27 வய­தான மனைவி தனது இரண்டு பிள்­ளை­க­ளுடன் தனது குடிசை வீட்டில் இருந்­துள்ளார். இதன்­போது கடும் மழை­யடன் கூடிய இடி மின்­னலும் ஏற்­பட்­டுள்­ளது.

திடீ­ரென மின்னல் தாக்­கி­யதில் குறித்த பெண் உடல் கருகி சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார்.

தக­வ­ல­றிந்த பொலிஸார் சம்­பவ இடத்­துக்கு விரைந்து சட­லத்தை மீட்டு பிரேதப் பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­துள்­ளனர்.

பிரேதப் பரி­சோ­த­னையின் போது குறித்த நெஞ்­சுப்­ப­குதி வெந்­துபோய் கரு­கிய நிலையில் இருந்­துள்­ளது. எனவே  தொலை­பேசி வைத்­தி­ருந்­ததால் அதன் மூலம் மின்னல் தாக்கி அவர் இறந்ததாகக் கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

lightning strikes death woman holding phone chest area

More Tamil News

Tamil News Group websites :