சவூதியும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்

0
600
Saudi Russia planning increase crude production Tamil news

Saudi Russia planning increase crude production Tamil news

சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் சர்வதேசச் சந்தையில்  கச்சா எண்ணெய் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உற்பத்திக் கட்டுப்பாட்டைத் தளர்த்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இதையடுத்து கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேரல் அதிகரிப்பது தொடர்பாக சவூதி அரேபியா ரஷ்யா ஆகிய நாடுகள் ஒபெக்குடன் ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசியச் சந்தையில் விலை பூஜ்யம் புள்ளி 76 சதவீதம் அதிகரித்தாலும் கடந்த 8-ஆம் தேதியில் இருந்த குறைந்தபட்ச விலையான 75.30 டாலரைத் தொட்டது. அமெரிக்கச் சந்தையில் 1 புள்ளி 18 சதவீதம் குறைந்த விலை பின்னர் சற்றே உயர்ந்து கடந்த ஏப்ரல் முதல் குறைந்தபட்ச விலையான 66.47 டாலரைத் தொட்டது.

Saudi Russia planning increase crude production Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை