மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்!

0
922
malaysia build island waters near singapore, malaysia tami news, malaysia, malaysia news, malaysia build island,

(malaysia build island waters near singapore)

மலேசியாவில் தேர்தலில் பிரதமர் மகாதீர் முகமது வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் அபிவிருத்தியில் சில மாற்றங்கள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக சிங்கப்பூருக்கு அருகே கடல் பரப்பில் புதிய தீவை உருவாக்க மலேசிய அரசு தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் மகாதீர் முகமது, தென்சீன கடல் பரப்பில் சிங்கப்பூருக்கு அருகே உள்ள மிடில்ராக்கில் ஏற்கனவே கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பின் படி, மலேசியாவுக்கு சொந்தமான மிடில்ராக்கிற்கு அருகே ஒரு குட்டித் தீவை மலேசிய அரசு உருவாக்கும் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

மேலும்,கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை ரத்து செய்துள்ள மகாதீர் முகமது, இப்போது குட்டித் தீவான சிங்கப்பூருக்கு போட்டியாக மற்றொரு தீவை உருவாக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: malaysia build island waters near singapore

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!

*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!

*மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை!

*மலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்!

*மலாய் மொழியில் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி!

*தலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்!

*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு

<< RELATED MALAYSIA NEWS>>