(construction workers staying crowded environment)
சிங்கப்பூரிலுள்ள கியோங் ஹோங் (Keong Hong) கட்டுமான நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 353,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்பற்ற வகையிலும், நெருக்கடியான சூழலிலும் தங்க வைத்திருந்தது அதற்குக் காரணம்.
செம்பவாங் கிரசென்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் கியோங் ஹோங் (Keong Hong) கட்டுமான நிறுவனம் ஊழியர்களுக்குத் தற்காலிகத் தங்கும் விடுதி ஒன்று நடத்தப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், மனிதவள அமைச்சு அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அங்கு வெளிநாட்டு ஊழியர்கள் 207 பேர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது, அதே தங்கும் விடுதியில், வேறொரு நிறுவனத்தைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் 17 பேரையும் இந்த நிறுவனம் தங்க வைத்திருந்தது.
ஆதலால் இப்படியொரு நெருக்கடியான சூழலில் பணியாளர்களை தங்கவைத்ததற்காக அபராதம் செலுத்துமாறு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வேண்டுகோள்விடுத்துள்ளது
மேலும் ,கியோங் ஹோங் நிறுவனம் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கும் மனிதவள அமைச்சு தடை விதித்துள்ளது.
tags;-construction workers staying crowded environment
most related Singapore news
சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com