பிரான்ஸில், பொலிஸாரிற்கு சோதனை கொடுத்த மூட்டைப்பூச்சி!

0
586

பிரான்ஸில், Val-de-Marne இலுள்ள காவல்நிலையம் ஒன்று கடும் மூட்டைப்பூச்சி தொல்லையால் மூடப்பட்டுள்ளது. வீடுகளில் மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதிப்படுவது நாம் அறிந்தது, ஆனால் காவல் நிலையம் மூடும் அளவுக்கு மூட்டைப்பூச்சி தொல்லை இங்கு தான் கேள்விப்படுகிறோம். Chennevières-sur-Marne police station close-Bedbug

Chennevières-sur-Marne நகர பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகள், சமீப நாட்களாக கடுமையாக மூட்டைப்பூச்சி கடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், காவல்நிலையத்தில் மூட்டைப்பூச்சிகளை அழிப்பதற்காக, செவ்வாய்க்கிழமை (மே 29) மாலையில் இருந்து இந்த காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. 24 மணிநேரங்கள் இந்த நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

180 சதுர மீட்டர்கள் அளவு கொண்ட இந்த நிலையத்தின், சிறைக்கூண்டுகள், அதிகாரிகளின் அறைகள் மற்றும் ஆவணங்கள் சேமிப்பறை, ஆயுத அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**