வெளிநாட்டில் வயதில் குறைந்த வாலிபருடன் ஊர் சுற்றும் உலக அழகி!

0
753

(Bollywood Actress Priyanka Dating American Singer)

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட பத்து வயது குறைந்த பாடகருடன் டேட்டிங் சென்று வருவதாக செய்திகளில் வெளியாகியுள்ளது.

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தற்போது வயதாகிறது. 2004ஆம் ஆண்டு உலா அழகி பட்டம் பெற்றுக் கொண்டதன் பின்னர் படங்களில் நடிப்பதில் பிசியாகி இருந்த பிரியங்கா தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

இதற்காக அமெரிக்கா பறந்த மும்மை அழகி அங்கேயே செட்டில் ஆகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் அமெரிக்காவின் இளம் பாடகராக நிக் ஜோனாஸ் உடன் டேட்டிங் சென்று வருவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன. இதில் என்ன விசேஷம் என்றால் ஹிந்தியில் பல நடிகர்களுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்ட பிரியங்கா தற்போது தன்னை விடவும் மிக இளமையான ஒருவருடன் ஊர் சுத்துவது பலரை வியப்பிலாழ்த்தியுள்ளது.

இதை உறுதி செய்யும் முகமாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியான காணொளியில் இருவரும் மிகவும் நெருக்கமாக இருப்பது இவர்களின் நெருக்கத்தை கூறுவதாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Tag: Bollywood Actress Priyanka Dating American Singer