மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்!

0
988
Thun Mahadeer Action Announcement, malaysia tamil news, malaysia news, malaysia, Thun Mahadeer,

{ Thun Mahadeer Action Announcement }

மலேசியா: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக நோன்பு பெருநாளை முன்னிட்டு 2 நாட்களுக்கு அதிவேக சாலைகளில் ( டோல் சாவடி ) 50 வீதம் கழிவு வழங்கப்படவிருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், இவ்வாண்டுக்கான சுதந்திர தின கருப்பொருள் மலேசியாவை நேசிப்போம் என துன் மகாதீர் அறிவித்துள்ளார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் ஜிஎஸ்டிக்கு பதில் எஸ்எஸ்டி வரி வசூலிக்கப்படும்.

சிங்கப்பூர் மலேசியா இடையிலான அதிவேக ரயில் சேவை போல, மிகப் பெரிய திட்டங்களை நிறுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும்.

சிங்கப்பூருக்கான அதிவேக ரயில் சேவை நிறுத்தப்பட்டது குறித்து, அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக டீசல், ரோன் 95 பெட்ரோல் விலை நிலைநிறுத்தப்படுவதோடு, ரோன் 97 பெட்ரோல் விலை உலக பெட்ரோல் சந்தையை சார்ந்திருக்குமென்றும் மகாதீர் கூறியுள்ளார்.

யுஐடிஎம் குறித்து அமைச்சரவையில் இந்த விவாதமும் நடக்கவில்லை எனக் கூறிய பிரதமர், பிரிம் தொகைக்கு பதிலாக வாழ்க்கை செலவீன உதவிநிதி வழங்கப்படுமென்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கடந்த அரசு செய்த தவறுகளையும் பலவீனங்களையும் புதிய அமைச்சரவை அடையாளம் கண்டிருப்பதாக துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.

Tags: Thun Mahadeer Action Announcement

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்!

*மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..!

*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..!

*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைந்த் அதிரடி அறிவிப்பு!

*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக்  டாக்டர் மகாதீர் உறுதி!

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்!

*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு!

*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா? காரணம் என்ன..?

*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

<< RELATED MALAYSIA NEWS>>