{ situation country worse Mahatir }
மலேசியா: நாட்டின் நிர்வாக முறைக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் நாட்டின் நிர்வாகச் செலவினம் குறைக்கப்படும் என்றும் தேவையற்ற மற்றும் வீண் செலவுகளும் குறைக்கப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் இதற்கு முன் ஆட்சியிலிருந்த அரசாங்கள் விட்டுச் சென்ற அதிகமான பிரச்னைகளை நாங்கள் சந்தித்திருக்கின்றோம் என்று இன்று புத்ராஜெயா, பெர்டானா புத்ராவில் நடைபெற்ற 2ஆவது அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது இதனை கூறியுள்ளார்.
நாட்டின் நிர்வாக செலவினத்தை குறைப்பதற்கு நிதி முறை நல்ல முறையில் நிர்வாகிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது செலவினங்களை வேண்டுமென்றே குறைக்கப்படும் என்று அர்த்தமல்ல.
அதிகமான வீண் செலவினங்கள் ஏற்படாமல் இருக்கவும் செலவுகள் ஒதுக்கி வைக்கப்படாமலிருக்கவும் இவ்வாறு செலவுகள் குறைக்கப்படுகின்றது. அதே வேளையில், நாட்டின் நிதி நிலைமையையும் வலுப்படுத்த வேண்டும் என்று துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அசிஸா வான் இஸ்மையில், அமைச்சரவை உறுப்பினர்கள், நாட்டின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாகடர் அலி ஹம்சா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
பக்கத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதிகள் 14ஆவது பொதுத் தேர்தல் தொடங்கி சுமார் 100 நாட்களுக்குள் நிறைவேற்றி வைக்கப்படும் என்று அதன் தலைவருமான துன் மகாதீர் கூறியுள்ளார்.
100 நாட்களுக்கு வாக்குறுதிகள் யாவும் நிறைவேற்றப்படும் என்று நாங்கள் வாக்குறுதியளித்திருந்தோம். ஆனால், நாட்டின் நிலைமை நாங்கள் நினைத்ததைவிட மோசமான நிலையில் உள்ளது.
கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதே வேளையில், நாட்டின் நிதி நிலைமையைச் சீர்படுத்துவதோடு நிர்வாக முறைக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும் என்று துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டியை அகற்றுதல், பல்வேறு முயற்சிகளின் வழி வாழ்கை செலவினங்களை குறைத்தல், டோல் கட்டணம் ரத்து, எண்ணெய் விலையை நிலை நிறுத்துதல், பெட்ரோலுக்கான உதவித் தொகை உட்பட 100 நாட்களுக்குள் 10 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என பக்காத்தான் ஹராப்பான் 14ஆவது பொதுத் தேர்தலின்போது வாக்குறுதிகளை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags: situation country worse Mahatir
<< RELATED MALAYSIA NEWS>>
*எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு!
*மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்!
*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்!
*மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..!
*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..!
*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைடந்த் அதிரடி அறிவிப்பு!
*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் டாக்டர் மகாதீர் உறுதி!
*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!
<< RELATED MALAYSIA NEWS>>