செம்மண் தரையில் நடைபெறும் கிராண்ட் ஸ்லாம் டெனிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன் பிரான்ஸில் மே 27 ஞாயிறன்று தொடங்கியது. Serena Williams participated open tennis 2018
கடந்த ஓராண்டுக்கு மேலாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது முதல் ஆட்டத்தில் செக் நாட்டின் பிளிஸ்கோவாவை 7-6 (7-4) 6-4 செட்களில் வெற்றி கொண்டு இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
பிரெஞ்ச் ஓபன் போட்டி 2-ஆம் சுற்றுக்கு ரஃபேல் நடால், மரின் சிலிக், ஷபவோலவ் உள்ளிட்டோர் முன்னேறினர். உலகின் முதல்நிலை வீரர் நடாலும், இத்தாலியின் சீமோன் பொலேலியும் முதல் சுற்றில் மோதினர். இதில் 6-4, 6-3, 7-6 (9) என்ற 3 செட்களில் நடால் வெற்றி பெற்றார். 11-வது சாம்பியன் பட்டத்தை எதிர்நோக்கியுள்ள நடால், அடுத்த சுற்றில் ஆர்ஜென்டீனாவின் கியுடோ பெல்லாவே சந்திக்கிறார்.
மூன்றாம் நிலை வீரர் மரின் சிலிக் 6-3, 7-5, 7-6 என்ற செட்களில் ஆஸி.யின் ஜேம்ஸ் டக்வொர்த்தை வென்றார். கனடாவின் ஷபவாலோவ் 7-5, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸி வீரர் ஜான் மில்மேனை வீழ்த்தினார். முன்னாள் சாம்பியன் கார்பைன் முகுருசா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
15 மாத தடைக்கு பின் வரும் மரியா ஷரபோவா தனது முதல் ஆட்டத்தில் டச் நாட்டின் ரிச்சேல் ஹோகேன்கெம்புடன் மோதுகிறார்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் நிக் கிர்ஜியோஸ் முழங்கை காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்விட்சர்லாந்து வீரரான ஸ்டான் வாவ்ரிங்கா, ஸ்பெயின் வீரரான கில்லர்மோ லோபஸிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
**Most Related Tamil News**
- பிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!