இளம் பெண்ணுக்கு தாயின் கண் முன் நேர்ந்த கொடூரம்: அவரே எதிர்ப்பார்த்திருக்கவில்லை!

0
615
Felicity Energy Drink Sun Coast

Felicity Energy Drink Sun Coast

சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்தும் நுகர்வுக்கு ஏற்றதல்ல. அவற்றை நுகரும் முன்னர் அவை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

இளைஞர்களிடையே பிரபலமாகவுள்ள எனர்ஜி டிரிங்க்ஸ் என்றறியப்படும் சக்தி பானத்தை அருந்தியெ பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி தொடர்பில் அவரது தாயார் விபரித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சன்சைன் கோஸ்டைச் சேர்ந்த யுவதியொருவரின் தாயாரே இச்சம்பவத்தை விபரித்துள்ளார்.

டொனா ஹொனன் என்ற அத்தாயாரின் மகளின் வயது 14. அன்றைய தினம் அவர் மகளின் அறைக்குள் நுழைந்த வேளையில் அவர் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.

கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர் துடித்துக்கொண்டிருந்துள்ளார். மின்சாரம் தாக்கிய ஒருவரைப் போல் அவர் காணப்பட்டுள்ளார்.

அவரது பற்களும் கடிபட்டுக்கொண்டிருந்துள்ளன. இதனையடுத்து உடனடியாக அம்பியூலன்ஸிற்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார் அப் பெண். அங்கு வந்த முதல் உதவிக்குழுவினர் யுவதி என்ன உட்கொண்டார் என கேட்டுள்ளனர்.

இதன்போது சக்தி பான டின் ஒன்றை கண்டதாகவும், இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து, தான் முதல் உதவிக்குழுவிடம் தெரிவித்த போது அவர்கள் அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதாகவும், சக்தி பானமே இவற்றுக்கான காரணமென அவர்கள் குறிப்பிட்டதாகவும், அப்பெண் சுட்டிக்காட்டியுள்ளார்.

சக்தி பானங்களால் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நடத்தப்பதாகவும், இவை அதிகமாக இளைஞர்களுக்கு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகரித்த இதயத்துடிப்பு, பதற்றம் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் போன்றவை இத்தகைய சக்தி பானங்களால் ஏற்படுவதாகவு சுட்டிக்காட்டப்படுகின்றது. பெற்றோர் இத்தகைய பானங்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது,

இவ்வாறான பானங்கள், எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி விற்பனை செய்யப்படுவது எவ்வாறு எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.