குடியேற்றவாசிகள் பாரிஸிலிருந்து வெளியேற்றம்!

0
441
French refugees pullout Paris

பிரான்ஸ் தலை நகரான பாரிஸில், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகளை வெளியேற்றும் பணிகளை பொலிஸார் இன்று (மே 30) ஆரம்பித்துள்ளனர்.  French refugees pullout Paris

தீவிர வலதுசாரி கட்சிகளின் எழுச்சியை குடியேற்றவாசிகளின் இருப்பு தூண்டியுள்ள நிலையில், குடியேற்றவாசிகள் தொடர்பான பிரச்சினையை சமாளிக்க ஐரோப்பிய அரசியல்வாதிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதேவேளை, அப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அங்கு கலகத் தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குடிவரவு விடயத்தில் உறுதியாகவும், நியாயமாகவும் செயற்பட விரும்புவதாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆனாலும், குடியேற்றவாசிகள் மீதான இறுக்கமான விதிகளை கொண்ட சட்டமூலமொன்றுக்கு அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குடியேற்றவாசிகள் தொடர்பான பிரான்ஸின் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், லிபியா மற்றும் சிரியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் போர் சூழல் நிலவிவருகின்ற நிலையில், அங்குள்ள மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்தவகையில், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிலிருந்து இதுவரை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள், கடல் மார்க்கமாக துருக்கி ஊடாக ஐரோப்பாவை சென்றடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**