​உடற்பயிற்சி கூடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

0
1200
boy suffered gym chennai villivakkam

boy suffered gym chennai villivakkam

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான சுரேஷ் என்பவரது மகன் மோகன் வயது (15) அந்த சிறுவன் 10-ஆம் வகுப்பு முடித்துள்ளார். கோடை விடுமுறையில் வீட்டின் அருகேயுள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த சில வாரங்களாக மோகன் பயிற்சி மேற்கொண்டுவந்தார். இந்த நிலையில், வழக்கம்போல பயிற்சி மேற்கொண்ட மோகனின் தலை மீது எதிர்பாராதவிதமாக இரும்பு உபகரணம் விழுந்ததாக கூறப்படுகிறது.

சுய நினைவை இழந்த அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து வில்லிவாக்கம் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து  விசாரித்துவருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :