அருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..!

0
500
Aruvi Director Next Tamil Movie,Aruvi Director Next Tamil,Aruvi Director Next,Aruvi Director,Aruvi

(Aruvi Director Next Tamil Movie)

அருவி பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமனின் அடுத்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. நேற்று இப்படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது.

இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன், தனது முதல் படமான ”அருவி” மூலமாகவே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

“அருவி” படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அருண்பிரபு புருஷோத்தமனின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது.

இந்நிலையில், அவரது இரண்டாவது படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ”அருவி” படத்தில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்த ரேமண்ட் படத்தொகுப்பையும், ”மேயாத மான்” படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் குமார் இசையையும் கவனித்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில், இப் படத்தின் தொடக்கவிழா குமுளி அருகில் உள்ள நோஸ்ரம் மையத்தில் நேற்று நடந்துள்ளது. இதில், 24 ஏம்.ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், படத்தொகுப்பாளர் ரேமண்ட்,பேராசிரியர் ராஜநாயகம், பாவலர் அறிவுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்.. :-

“தரமான மற்றும் அதே சமயம் பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இன்று அர்ப்பணிப்பு மற்றும் சின்ஸியரான அருவி பட புகழ் இயக்குனருடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், 24 AM ஸ்டுடியோஸ் இதுவரை சிவகார்த்திகேயனின் படங்களை மட்டுமே தயாரித்துள்ளது. எனவே, இன்னும் படத்தில் நடிப்பவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், இதில் சிவகார்த்திக்கேயன் நாயகனாக நடிக்கிறாரா அல்லது அருவி போன்று அனைவரும் புதுமுகங்களா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!

ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!

ஜெமினி கணேசன் ஆவணப்படம் : சாவித்திரிக்கு எதிரான காட்சிகளா..!

தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!

சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்த அஜித்..!

ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!

மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..!

எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..!

Tags :-Aruvi Director Next Tamil Movie

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 30-05-2018