Adi Dravidar Footwear, available electricity 26 years
விருதுநகர் மாவட்டம் சேஷாபுரத்தில், 1980ம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய நிலத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பலமுறை மனு அளித்தும் இப்பகுதிக்கு மின்சாரம் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
26 ஆண்டுகளாக இருளில் வாழும் மக்களின் துயரம் குறித்து ஒரு பிரபலமான தமிழ் செய்தி நிறுவனத்தில் வெளியானது. அதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து பட்டா வழங்குவதற்காக ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.
மேலும் மின் விநியோகம் செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த சேஷாபுரம் ஆதி திராவிடர் காலனி மக்கள் அந்த பிரபலமான தமிழ் செய்தி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
More Tamil News
- கள்ளத்துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் காலில் காயம்!
- 22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது – செல்லூர் ராஜூ!
- பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு – 87.4 % பேர் தேர்ச்சி!
- இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
- சிறுமியை கடத்தி மது ஊற்றி – பாலியல் தொல்லை!