கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை

0
435
up country labor salary increase meeting wellawatta

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. up country labor salary increase meeting wellawatta

இந்த பேச்சுவார்த்தை இன்றைய தினம் வெள்ளவத்தை ​லோறன்ஸ் தேவாலயத்தின் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் கொழும்பு வாழ் மலையக இளைஞர்கள், மலையக சமுக ஆய்வு மையம், மலையக இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தமிழர் பண்பாட்டு பேரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

கூட்டு ஒப்பந்தம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உட்பட்டுள்ள நிலையில், இந்த பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த ஒப்பந்தத்தின் வாயிலாக தொழிலாளர்களுக்கு ஏற்ற வேதனத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
up country labor salary increase meeting wellawatta

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை