15 லட்ச ரூபாய் தருவதாக பிரதமர் மோடி கூறியதில்லை – பாஜக எம்.பி அமர் சாபல்!

0
732
Violence brutal solve problem Nonviolence capable winning everything

modi never told rs.15 lakh bjp mp amar chabal

மகராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினரான அமர் சாபல், பாஜகவின் 4 ஆண்டு சாதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது பொதுமக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி ஒருபோதும் கூறியதில்லை என்று கூறினார்.

மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும், என்று பிரதமர் கூறியதாக எதிர்கட்சிகள் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர் என்றும், இதன் மூலம் தவறான தகவலை அளித்து மக்களின் எண்ணத்தில் குழப்பத்தை அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை எம்.பி அமர் சாபல், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அப்படியொரு தகவல் இடம்பெறவில்லை என்பதை கவனிக்கவேண்டும் என்றும் கூறினார்.

2014 தேர்தல் பரப்புரையின் போது நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவதாக பிரதமர் மோடி கூறியதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :