நிதி ஒதுக்கீடுகள் குறித்த கவலையை விடுங்கள்

0
477
emergency urgent situation finance no need maithripala

நிதி ஒதுக்கீடுகளை தடையாகக் கருதாது நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். emergency urgent situation finance no need maithripala

கடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய்க்கான கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி நேற்றைய தினம் சுகாதார அமைச்சுக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இதன்போது அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, நோய் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காகவும் சிகிச்சைகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் துரித செயற்திட்டங்களைக் கேட்டறிந்தார்.

சிகிச்சை நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் தொடர்பில் குறைபாடுகள் நிலவுமாயின், கேள்வி பத்திர நடைமுறைகளுக்கு அப்பால் அவசர தேவையாகக் கருதி அவற்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சை நடவடிக்கைகளின் போது மாகாண மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகளை துரிதமாக மாகாண சபைகளுக்கு விடுவிக்குமாறும் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
emergency urgent situation finance no need maithripala

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :