kala’s film screened krnataka vatta nagaraj opposed
கன்னடர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தை, கர்நாடக மாநிலத்தில் திரையிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம், என வாட்டாள் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாம்ராஜ்நகரில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் மாநிலத்தில் கடந்த ஆண்டு கடுமையான வெயில் மற்றும் பருவமழை பொய்த்து போனதால் அணைகளில் போதுமான அளவிற்கு தண்ணீர் இல்லை. மேலும் மாநில மக்கள் குடிநீருக்கு கூட தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் லாபத்திற்காக கன்னடர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாநில அரசு அடிப்பணிய வேண்டும், எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றார். கன்னடர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ரஜினிகாந்தின் காலா படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிடக்கூடாது. மீறி திரையிட்டால் கன்னட அமைப்பினர் ஒன்றிணைந்து கடுமையான போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்தும் இதே கருத்தை கூறினார்.
More Tamil News
- இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் – இருவர் படுகொலை!
- பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றோர் எரித்துக் கொலை!
- சென்னை மெட்ரோ ரயிலில் 4 நாட்களாக தொடர்ந்து இலவச பயணம்!
- ஸ்டெர்லைட் ஆலையை மூடியது வெறும் கண்துடைப்பு – மு.க.ஸ்டாலின்!
- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை வெளியிட்டது – தமிழக அரசு!