முதல் சுற்றில் இலகு வெற்றிபெற்றார் மரின் சிலிச்!

0
686

(French Open 2018 Marin Cilic news Tamil)

ரோலன்ட்-கர்ரோஸ் என அழைக்கப்படும் முன்னணி டென்னிஸ் தொடரான பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் குரோட்டிய வீரர் மரின் சிலிச் வெற்றிபெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற முதலாவது சுற்றுப்போட்டியில் சிலிச், அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வர்த்தை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சிலிச் 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய சிலிச் 6-3 என முதல் செட்டையும் இரண்டாவது செட்டை 7-5 எனவும் இலகுவாக கைப்பற்றிய நிலையில், மூன்றாவது செட்டை தடுமாறி 7-6 (7-4) என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

சிலிச் அடுத்த சுற்றில் போலந்து வீரர் ஹர்பட் ஹர்கஷை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>

French Open 2018 Marin Cilic news Tamil