சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

0
911
CBSE Class 10 exam results released

CBSE Class 10 exam results released

நாடு முழுவதும் உள்ள 17,567 சிபிஎஸ்இ பள்ளிகளில் 16,24,682 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 86.70 சதவீத மாணவர்கள் இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போலவே மாணவர்களை விட 3.35 சதவீத மாணவிகளே இந்தமுறை அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மண்டல வாரியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் 99.60 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தையும், சென்னை மண்டலம் 97.37 சதவீத தேர்ச்சி பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுத்தவரை, 92.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு  முடிவுகளை மாணவர்கள் இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் இதற்கு முன்னரே 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வில் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை ஏற்பட்டிருந்தது. இதையடுத்து கணிதத் தேர்வை ஹரியானா மற்றும் டெல்லியில் மட்டும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்தது. இதனை கண்டித்து 10 -ம் வகுப்பு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், 10-ம் வகுப்பு கணித தேர்விற்கு மறுதேர்வு நடத்த தேவையில்லை என்ற அறிவிப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :