காதலிக்க மறுத்த பெண்ணுக்கு – கழுத்தில் கத்திக் குத்து!

0
1032
woman refused love - knife neck Cuddalore

woman refused love – knife neck Cuddalore

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், விருத்தாசலத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இதனையடுத்து இன்று விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் தனது தோழிக்கு விண்ணப்பப் படிவம் வாங்கச் சென்றபோது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அந்த பெண்ணை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச்சென்றுவிட்டார்.

இந்நிலையில் கழுத்தில் காயமடைந்த இளம் பெண், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் காவல்துறையினர் விசாரித்ததில்,கள்ளக்குறிச்சி கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரனும் அவரும் காதலித்ததும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டதும் தெரியவந்தது.

நேற்று விருத்தாசலத்தில் காதலியை சந்தித்துப் பேசப் பிரபாகரன் முயன்றபோது அந்த பெண் மறுத்துவிட்டதும், இந்நிலையில் இளம் பெண் தோழிக்கு விண்ணப்பப் படிவம் வாங்க இன்று கல்லூரிக்குச் சென்றபோது அவரை வழிமறித்துப் பிரபாகரன் கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற பிரபாகரனைத் தேடி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :